search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யம்பேட்டை விபத்து"

    அய்யம்பேட்டை அருகே கார் மோதி கட்டிட ஒப்பந்ததாரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை தெற்கு மனோஜிப்பட்டி சோழன் நகரைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 48). கட்டிட ஒப்பந்ததாரர்.

    இவர் தனது நண்பர் தஞ்சை மேல மானோஜிப் பட்டி சண்முகானந்தம் (53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திற்கு சென்று விட்டு மீண்டும் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முருகையன் ஓட்டி வந்தார். இவர்கள் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் தாழமங்கை கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த கார் மோதியது.இதில் முருகையன், சண்முகானந்தம் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்து விட்டார்.சண்முகானந்தம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே கோவிலடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சதீஷ் (வயது 29). கொத்தனார். பாட்டாளி மக்கள் கட்சியின் 1வது வார்டு செயலாளராவும் இருந்து வந்தார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கோவில் தேவராயன் பேட்டைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை நிகழ்ச்சிக்கு வந்த போது தஞ்சை- கும்பகோணம் சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே இருந்த வேகத்தடையும் அகற்றப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    ×